டெல்லி:பாரீஸ் ஒலிம்பிக்ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் 89.45 மீட்டர் எறிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுதான் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பெறும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5-ஆக உயர்த்துள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம், நடப்பு ஒலிம்பிக்கில் வெள்ளி என அடுத்தடுத்த பதக்கங்களைப் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீரஜ் சோப்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.