தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"ரோகித்தும் இல்ல.. கோலியும் இல்ல.. ஆஸ்திரேலிய தொடர்ல அவர் தான் டிரம்ப் கார்டு"- கங்குலி கணிப்பு! - SOURAV GANGULY

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

Etv Bharat
Sourav Ganguly (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 6:09 PM IST

ஐதராபாத்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் காவஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவுக்கு இன்னும் 8 ஆட்டங்களே மீதம் இருக்கின்றன.

நியூசிலாந்து தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினாலே இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி மனம் திறந்து பேசியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அதிக ஆதிக்கம் செலுத்தும் வீரர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சவுரவ் கங்குலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இந்திய அணியின் முக்கிய டிரம்ப் கார்டாக இருப்பார் என கணித்து உள்ளார்.

இது குறித்து பேசிய சவுரவ் கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட் இன்றியமையாத வீரராக உள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் அவர் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடிய நபராக இருப்பார். ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் டிராபி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

நியூசிலாந்து அணியை சொந்த மண்ணில் வைத்து இந்தியா எளிதாக வெல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சற்று கடினமானது தான். அந்த நேரத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் திறமையான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நபராக இருப்பார் என்றார்.

விபத்து காரணமாக ஏறத்தாழ 634 நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் ரிஷப் பன்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் கண்டார். வங்கதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பன்ட், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அணியில் இடம் பிடித்து உள்ளார்.

இதையும் படிங்க:புது ஹேர்ஸ்டைலில் மிரட்டும் தோனி! ஐபிஎல் சீசனுக்கு ரெடியா? Dhoni New Hairstyle!

ABOUT THE AUTHOR

...view details