ஹைதராபாத்:விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் 33-ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு செய்ன் நதியில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்தப்படவுள்ளது.
நீடா அம்பானி:இந்தநிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் கமிட்டியின் (international olympic committee) 142 ஆவது கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.இதில் 100 சதவீத வாக்குகளுடன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பாட்டர்.
இது குறித்து நீடா அம்பாணி கூறுகையில்,"சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறோன். ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள், என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேம்படுத்துவேன்" என தெரிவித்தார்.