மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. நியூசிலாந்து அணி கடந்த ஒன்றரை மாதமாக ஆசிய கண்டத்தில் சுற்றுப்பயணம் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முற்றிலும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி சொந்த மண்ணுக்கு சென்று தற்போது ஓய்வில் உள்ளது.
இதனை அடுத்து தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகினார். தற்போது இந்திய தொடரில் இருந்து மற்றொரு முக்கிய முக்கிய வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நியூசிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மைக்கெல் பிரேஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வில்லியம்சன் காயம் குறித்து பேசிய நியூஸிலாந்து அணியின் தேர்வு குழு உறுப்பினர் சாம் வெல்ஸ், வில்லியம்சன் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார்.