துபாய்:ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுசி பேட் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய அமெலியா கெர் - சுசி பேட்வுடன் இனைந்து நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
இதில் 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் விளாசிய சுசி பேட் மலாபா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்ன களமிறங்கிய தென்னாப்பிரிக்க கேப்டன் சோஃபி டெவின் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்த வந்த ப்ரூக் ஹாலிடே அதிரடியாக விளையாடினார்.
28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் விளாசி இருந்த நிலையில் பெவிலியன் திரும்பினர்.மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் 38 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 43 ரன்கள் விளாசி இருந்த நிலையில் மலாபா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க:இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! 36 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை வெற்றி!
20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்துள்ள நியூசிலாந்து அணி. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் மலாபா 2 விக்கெட்டுகளும், நாடின் டி கிளர்க், அயபோங்க மற்றும் சோலி ட்ரையான் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பை தட்டி துக்கப் போவது யார் தென்னாப்பிரிக்கா? அல்லது நியூசிலாந்த என்பதற்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்துவிடும். பொறுத்து இருந்து பார்ப்போம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று.