தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியன் ரயில்வே, ராணுவம் அணி! - murugappa gold cup hockey - MURUGAPPA GOLD CUP HOCKEY

Murugappa gold cup hockey: 95வது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ரயில்வே அணியும், ராணுவ அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஹாக்கி வீரர்கள்
ஹாக்கி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 7:37 AM IST

சென்னை:95-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று 3 போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் கர்நாடகா அணி 6-1 என்ற கோல் கணக்கில் சென்ட்ரல் செக்ரடேரியட் அணியை வீழ்த்தியது. அரையிறுதியில் இடம்பெறவில்லை என்றாலும், கடைசி ஆட்டத்தை கர்நாடகா, அமோக வெற்றியுடன் முடித்தது.

அரையிறுதியில் 2 அணிகள்:இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய ராணுவம் 2-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி, ஏ பிரிவில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் சிரில் லுகுன் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து 41வது நிமிடத்தில் அக்‌ஷய் துபே கோல் அடிக்க, 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவம் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து 46வது நிமிடத்தில் மகாராஷ்டிரா அணிக்கு வெங்கடேஷ் கோல் அடித்து ஆட்டத்தை 2-1 கணக்கிற்குக் கொண்டு வந்தார். இறுதிவரை கடுமையாகப் போராடிய மகாராஷ்டிரா அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. இதனால் இந்திய ராணுவ அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் பெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு இருந்த நிலையில், மகாராஷ்டிரா அணி தோல்வி அடைந்ததாதல் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:பதக்கங்களுடன் முதலமைச்சரிடம் வாழ்த்து பாராலிம்பிக் வீரர்கள்.. ரூ.5 கோடி காசோலையை வழங்கி பாராட்டு!

ரயில்வே த்ரில் வெற்றி:மூன்றாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய ரயில்வே 5-4 என்ற கோல் கணக்கில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் பெனால்டி கார்னரில், தேவிந்தர் வால்மிகி பிபிசிஎல் அணிக்கு முதல் கோலை அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னேறச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே அணியின் ஜோகிந்தர் சிங் மற்றும் பரம்ப்ரீத் சிங் ஆகியோர் பெனால்டி கார்னர்களை அடுத்தடுத்து கோலாக மாற்ற, (9வது மற்றும் 13வது நிமிடத்தில்) 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சுதாரித்து ஆடிய பிபிசிஎல் அணி, 14வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய ராஜிந்தர் சிங் அதனை கோலாக மாற்றினார்.

இரு அணிகளும் சமமாக இருந்ததால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஆட்டத்தின் 28 மற்றும் 35-வது நிமிடங்களில் ரயில்வே அணி கோல் அடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 54 மற்றும் 57-வது நிமிடத்தில் பிபிசிஎல் அணியின் தேவிந்தர் வால்மிகி கோல் அடித்து ஆட்டத்தை 4-4 என்ற சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து மேட்ச் டிரா என நினைத்து இருந்த நேரத்தில், ரயில்வே அணியின் தர்ஷன் கவாக்கர் 58வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை மாற்றினார். இதனால் 5-4 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் அணியை வீழ்த்திய ரயில்வே அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

ABOUT THE AUTHOR

...view details