ஐதராபாத்:துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பி அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் விலகி உள்ளனர். அதேபோல் இந்தியா சி அணியில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் அணியில் இருந்து விலகி உள்ளார்.
முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உடல் நலக் குறைவு காரணமாக துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரவீந்திர ஜடேஜா விலகலுக்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு பதிலாக நவதீப் சைனி மற்றும் கவுரவ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக களமிறங்கும் வீரர் குறித்த அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. மற்ற வீரர்கள் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் வழக்கம் போல் கலந்து கொள்கின்றனர். அடுத்தடுத்து இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா, அடுத்த ஆண்டு இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
அடுத்தடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு பயிற்சிக் களமாக துலிக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வரும் செப்டம் 5ஆம் தேதி துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அனந்தபூர், ஆந்திர பிரதேசம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிக்கான வீரர்கள் பட்டியல்: