தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: லக்சயா சென் அபார வெற்றி! - Paris Olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சய சென் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Etv Bharat
Lakshya Sen (AP)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 2:51 PM IST

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.31) நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென், இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். அபாரமாக விளையாடிய லக்சயா சென் இறுதியில் 21-க்கு 18, 21-க்கு 12 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் லக்சயா சென், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். 22 வயதான லக்சயா சென், தொடக்கத்தில் சில மோசமான ஷாட்டுகள் மூலம் எதிரணிக்கு புள்ளிகளை தாரை வார்த்தார். அதன் பின் சுதாரித்து விளையாடிய லக்சயா சென், சீரான இடைவெளியில் ஸ்மாஷ் ஷாட்டுகளை அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் 21-க்கு 18, 21-க்கு 12 என்ற நேர் செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். 22 வயதான லக்சயா சென் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதே போல் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பிவி சிந்து வெற்றி பெறும் பட்சத்தில் அவரும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: பிவி சிந்து அபார வெற்றி! அடுத்த சுற்று என்ன? - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details