பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் - மலேசியாவை சேர்ந்த லீ ஜி ஜியா என்பவரை எதிர்கொண்டார். தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லக்சயா சென் முதல் செட்டை 21-க்கு 13 என்ற கணக்கில் வென்றார்.
இரண்டாவது செட்டில் மலேசிய வீரர் லீ ஜி ஜியா கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். அவருக்கு எதிராக புள்ளிகளை சேர்ப்பது லக்சயா சென்னுக்கு கடுமையானதாக அமைந்தது. இருப்பினும் தொடர் தாக்குதல் மூலம் மலேசிய வீரருக்கு லக்சயா சென் கடும் நெருக்கடி கொடுத்து வந்தார்.