பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் விளையாட்டு அரைஇறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்செனை எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த லக்சயா சென், சிறிது நேர்த்திற்கு பின் பின்னடைவை சந்தித்தார்.
அதேபோல் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டர் ஆக்சல்சென் அதன் பின் தனது சுயரூபத்தை காட்டி லக்சயா சென்னை மிரட்டினார். கடும் போட்டிக்கு மத்தியில் முதல் செட்டை விக்டர் ஆக்சல்சென் 22-க்கு 20 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் விக்டர் ஆக்சல்சென் 21க்கு 14 என்ற கணக்கில் வென்று அபார வெற்றி பெற்றார்.