சென்னை:தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும். எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சாந்தி? : தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் தமிழ்நாட்டிற்காக 50 பதக்கங்களும், இந்தியாவிற்காக 12 சர்வதேச பதக்கங்களும் தடகளத்தில் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை.
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலின சரிபார்ப்பு சோதனையில் அவர் தோல்வியடைந்ததால் தடகள போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் இதற்கு முன்னதாக வென்ற பதக்கங்களும் பறிக்கப்பட்டன.
இமானே கெலிஃப் விவகாரம் :கடந்த ஆக 1ஆம் தேதி நடைபெற்ற பாரீஸ் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப், 46 வினாடிகளில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியை வெளியேற்றினார்.