ஐதராபாத்:2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஐபிஎல் வீரர்களுக்கு அடித்த அதிர்ஷடம்! ரூ.7.5 லட்சம் போனஸ் அறிவித்த ஜெய்ஷா! - IPL New Bonanza for players - IPL NEW BONANZA FOR PLAYERS
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களுக்கு 7.5 லட்ச ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
Players and members of Kolkata Knight Riders pose with the IPL trophy (IANS)
Published : Sep 28, 2024, 7:56 PM IST
ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்" என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வங்கதேச தொடரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழக்கப் போகும் இந்தியா? எப்படி சாத்தியம்? - 2025 WTC Final