ஜெட்டா:18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லிம்யம்சன் அன்சோல்டு வீரர் ஆனார்.
அவரைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அஜிங்ய ரஹானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோர் அன்சோல்டு வீரர்களாகினர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரண் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார்.
அவரை 2 கோடியே 40 லடச் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் சீசனில் 18 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன சாம் கர்ரன் இந்த முறை வெறும் 2 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குர்ணால் பாண்ட்யாவை 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கைப்பற்றியது. அதேநேரம் இந்திய வீரர் நிதிஷ் ரானா 4 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் போனார்.
தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கில்டனை அவரது அடைப்படைத் தொகையான 1 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்தை எந்த அணியும் வாங்க விரும்பாத நிலையில் அவரும் அன்சோல்டு வீரர் ஆனார். மார்கோ ஜான்சனை 7 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தன் வசமாக்கியது.
நியூசிலாந்து அதிரடி வீரர் டேரி மிட்செல், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோரை எந்த அணியும் வாங்க விரும்பாத நிலையில் அவர்கள் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். மற்றொரு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிசை 2 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிங்க:IPl Auction 2025 Live: சென்னை அணியில் சாம் கர்ரன்!