ஜெத்தா:அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
ராபின் மின்ஸ்:அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் முதல் பழங்குடியின வீரரான ராபின் மின்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியால் 65 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியில் இஷான் கிஷான்:இஷான் கிஷானை ஏலத்தில் எடுக்க மும்பை, பஞ்சாப், டெல்லி அணிகள் கடும் போட்டி நிலவியது. ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியாக சன்ரைசர்ஸ் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ்:ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸை ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ்:தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் ரூ.20 கோடிக்கு மேல் ஏலத்திற்கு சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் 20 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்படும் 3வது வீரர் இவர். வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆர்சிபியில் ஹேசில்வுட்:ஆஸ்திரேலியாவின் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் ரூ. 12.5 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
பிரசித் கிருஷ்ணா:இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை குஜராத் டைட்டன்ஸ் ரூ. 9.5 கோடியில் அவரைப் ஏலத்தில் எடுத்தது.ஆவேஷ் கான்:ஆவேஷ் கான் ஏலத்தில் வந்த போது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ஆகிய இரு அணிகளும் ஏலத்தை தொடங்கின. ஆனால் விலை ரூ. 6.5 கோடியை எட்டியவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் இணைந்தது. இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 9.75 கோடியில் அவரைப் ஏலத்தில் எடுத்துள்ளது.
சிஎஸ்கேவில் இணைந்த வேகப்புயல்:இடதுகை வேகப் பந்துவீச்சாளரான கலீல் அஹமது ஏலத்திற்கு வந்தது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ஆகிய இரு அணிகளும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டின. ஆனால், CSK ரூ. 4.8 கோடி என்ற மதிப்பில் அவரைப் ஏலத்தில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க:IPL Auction 2025: சோல்டு, அன்சோல்டு வீரர்களின் முழுப் பட்டியல்!
விஜய் சங்கரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே:தமிழக வீரர் விஜய் சங்கர் ஏலத்தில் வந்த உடன் அவரை எடுக்க சிஎஸ்கே ஆர்வம் காட்டியது. குஜராத் அணியும் விஜய் சங்கரை எடுக்க போட்டி போட்டது. இறுதியில் விஜய் சங்கரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.30 லட்சம் என்ற அடிப்படை தொகையில் இருந்து ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
RTM கார்டை பயன்படுத்திய மும்பை இந்தியன்ஸ்:நமன் தீர் ரூ. 20 லட்சம் அடிப்படை விலையிலிருந்து ஏலம் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. அவரின் மதிப்பு ரூ. 3.4 கோடிக்கு உயர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் RTM கார்டை பயன்படுத்தினர். ராஜஸ்தான் தங்கள் ஏலத்தை ரூ. 5.25 கோடியாக உயர்த்தியபோதும், மும்பை அவரை தக்கவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.