ஜெட்டா: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளை காட்டிலும் இராண்டாவது நாளில் வீரர்களுக்கான கிராக்கி என்பது பெரிய அளவில் காணப்படவில்லை. சில பெரிய வீரர்களும் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரை அதிகபட்சமாக 10 கோடியே 75 லட்ச ரூபாய்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய ஆல் ரவுண்டர் குர்ணால் பாண்ட்யாவை 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கைப்பற்றியது.
இலங்கை தமிழர் கிரிக்கெட் வீரரான விஜய்காந்த் வியாஸ்காந்த் எந்த அணியும் வாங்காத நிலையில் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார். அதேபோல், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், அஜிங்ய ரஹானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோரும் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.