பெங்களூரு:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அனியை எதிர் கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூரூ அணி. அதிரடியாக விளையாடிய ராஜ் படிதார் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். மறுபுறம் 29 பந்துகளை எதிர் கொண்ட, வில் ஜாக்ஸ் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது பெங்களூரு. டெல்லி அணி தரப்பில் கலில் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிடல்ஸ்.
டேவிட் வார்னர் மற்றும் ஜேக் ஃப்ரேசர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் வார்னர். இதனை அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல் 2 ரன்னுக்கு வெளியேற, மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜேக் ஃப்ரேசர் 21 ரன்கள் அடித்து இருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.