ஷா ஆலம்: ஆசிய பேட்மிண்டன் போட்டி மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி, தாய்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில், ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சுபநிடா கேட்டோங் (Supanida Katethong) எதிர்த்து விளையாடினார். இதில் 21-12, 21-12 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
பின்னர், இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபி சந்த் (Treesa Jolly-Gayatri Gopichand) ஜோடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜோங்கோல்பன் கிடிதரகுல்-ரவிந்த பிரஜோங்ஜாய் (Jongkolphan Kititharakul-Rawinda Prajongjai) ஜோடியை வீழ்த்தியது.
பின்னர், ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா (Ashmita Chaliha), பூசனன் ஓங்பாம்ருங்பன்னிடம் (Busanan Ongbamrungphan) 21-11, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தார்.