தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ind vs nz test: 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா.. சொந்த மண்ணில் மோசமான சாதனை! - IND VS NZ TEST MATCH

பெங்களூரில் நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா (Credit - AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 3:10 PM IST

பெங்களூரு:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.

ஆனால், தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாள் போட்டி இன்று ( வியாழக்கிழமை) தொடங்கியது. நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். சுப்மன்கில் முழு உடல்தகுதியுடன் இல்லாததால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சர்ப்ரஸ்கான் இடம் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:சூப்பர் ஓவரை மெய்டன் ஓவராக வீசி உலக சாதனை! யார் அந்த வீரர்?

மோசமான சாதனை:மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, சர்பராஸ்கான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்,ரிஷப் பந்த் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

அதிரடி வீரர் ரிஷப் பந்து 49 பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்களுக்கு விக்கெட் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல், ஜடேஜா அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் 31.2 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் டிம் சவுதி ஒரு விக்கெட்டும், மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டும் வில்லியம் ஓ ரூர்க்கி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய மண்ணில் இந்தியா அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இது என்ற சோகமான சாதனையை இந்திய அணி படைத்து இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details