நியூயார்க்:நடப்பு உலகக் கோப்பை தொடர் (T20 WORLD CUP) அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்யில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 25வது லீக் போட்டியில் இந்தியா (IND) - அமெரிக்கா (USA) அணிகள் மோதின. நியூயார்க்கில் உள்ள நாசவ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் அமெரிக்க அணியின், ஓபனிங் பேட்மேன்களாக ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் ஆகியோர் களமிறங்கினர். அதில், அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஜஹாங்கீர் அவுட் ஆகினார். இதனையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸ், 2 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட் கொடுத்து வெளியேறினார்.
இவ்வாறாக முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார் அர்ஷ்தீப். இதனையடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் 22 ரன்கள், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள், நிதிஷ் குமார் 27 ரன்கள் ஆகியோர் சுமாரான பங்களிப்பை அளித்து வெளியேறினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது அமெரிக்கா. இந்திய அணிதரப்பில் அபாரமாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ஓபனிங் பேட்மேன்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் இரண்டாம் பந்தில் கோலி டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.