பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா - ஸ்பெயின் இடையே கடும் போட்டி நிலவியது. மாறி மாறி கோல் போட இரு அணி வீரர்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
இருப்பினும் கடும் நெருக்கடி காரணமாக முதல் பாதியில் ஒரு கோல் கூட பதிவாகவில்லை. மாறாக இந்திய வீரர்கள் மன்பிரீத் மற்றும் குர்ஜந்த் ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து ஆட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தனது முதல் கோல் அடித்தது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்க் மிரல்லஸ் கோல் திருப்பி அணியின் கோல் கணக்கை தொடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய இரு அணி வீரர்கள் மேற்கொண்டு கோல் திருப்ப முயற்சித்தனர். இந்திய வீரர்கள் பதில் கோல் திருப்பி போட்டியை சமன் செய்ய கடுமையாக முயற்சித்தனர். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
பெனால்டி வாய்ப்பை கோலாக திருப்பி ஸ்பெயின் அணி முயற்சித்த போது அதை இந்திய வீரர்கள் போராடி தடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது பாதியின் இறுதி நிமிடத்தில் இந்திய அணி அசத்தல் கோல் அடித்தது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அட்டகாசமாக பதில் கோல் திருப்பி கணக்கை 1-க்கு 1 என்ற சமன் செய்தார்.