தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"சம்பளம் நல்லா கொடுத்தால் நானே என் பயோபிக்கில் நடிக்கிறேன்"- ராகுல் டிராவிட் கலகல! - Rahul Dravid Biopic - RAHUL DRAVID BIOPIC

சம்பளம் நல்லா கொடுத்தால் என் வாழ்க்கை கதையில் நானே நடிக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Etv Bharat
Rahul Dravid (ANI)

By ETV Bharat Sports Team

Published : Aug 22, 2024, 6:31 PM IST

ஐதராபாத்: மும்பையில் நடைபெற்ற தனியார் விருது விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். பயிற்சியாளராக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய 20 ஓவர் உலக கோப்பை வென்று தந்ததற்காக விழாவில் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ராகுல் டிராவிட்டின் தலைமையின் கீழ் ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. விருது விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு உற்சாகமாக ராகுல் டிராவிட் பதிலளித்தார். அப்போது உங்களது வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் நாயகனாக நடிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நகைச்சுவையாக நல்ல சம்பளம் கொடுத்தால் நானே என் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ராகுல் டிராவிட் தெரிவித்தார். ராகுல் டிராவிட் நகைச்சுவையாக கூறியது அங்கு சில நிமிடங்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர், இந்த நாடு முழுவதும் பயணம் செய்து ரசிகர்களின் அந்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன்.

நான் இந்தியா உலக கோப்பையை வெல்லும் போது அணியில் ஒரு வீரராக இருந்தது கிடையாது. ஆனால் ஒரு பயிற்சியாளராக இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய போது உடன் இருந்தது மிகுந்த மிகிழ்ச்சியையும் புது அனுபவத்தையும் வழங்கியது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

26வது தனியார் விருது வழங்கும் விழாவில் பல்வேறு வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோன் ஆண்டின் சிறந்த 20 ஓவர் பந்துவீச்சாளராக டிம் சவுதி அறிவிக்கப்பட்டார். ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக விராட் கோலியும், சிறந்த பந்துவீச்சாளராக முகமது ஷமியும் அறிவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அறிவிப்பு! எப்ப தெரியுமா? - India vs England Test series

ABOUT THE AUTHOR

...view details