தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

3 பந்துகளில் 24 ரன்.. நோ பாலும் இல்ல.. ஒய்டும் இல்ல.. எப்படி சாத்தியம்? அடிச்சது யார் தெரியுமா? - SACHIN TENDULKAR 3 BALLS 24 RUNS

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று பந்துகளில் 24 ரன்கள் விளாசி சச்சின் தெண்டுல்கர் ஒரு சாதனை படைத்துள்ளார். நோ பால், ஒய்டு எதுவுமின்றி சச்சின் எப்படி சாதித்தார் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Representative Image (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 14, 2024, 11:47 AM IST

ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட்டில் தொடர் சாதனைகள் படைக்கப்படுகின்றன. அதில் சில சாதனைகள் மட்டுமே வித்தியாசமானதாகவும், எளிதில் யாராலும் முறியடிக்க முடியாததாகவும் அமைகிறது. அப்படி சச்சின் தெண்டுல்கர் படைத்த ஒரு சாதனையை இங்கு விரிவாக பார்க்கலாம்.

2022-2023 ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சச்சின் தெண்டுல்கர் 3 பந்துகளில் 24 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அதேநேரம் நோ பால், ஒய்டு எதுவுமின்றி சச்சின் 3 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார் என்றால் நம்ப முடியாத வகையில் தெரியலாம்.

நியூசிலாந்து - இந்தியா தொடரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பரீட்சார்த்த முறையில் ஒரு விதியை அமல்படுத்தியது. அதன்படி போட்டி 2-க்கு 2 என்ற இன்னிங்ஸ் மற்றும் 10-க்கு 10 ஓவர் என்ற வகையில் நடைபெற்றது. அதாவது நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்கள் விளையாடும் அதைத் தொடர்ந்து இந்தியா, இலக்கை துரத்தும்.

இப்படியே 2-க்கு 2 என இன்னிங்ஸ் முறையில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இது தவிர பந்துவீச்சாளர்களுக்கு பின் புறம் உள்ள கருப்பு ஸ்கிரீன் கொண்ட பகுதி "மேட்ச் சோன்" (match zone) என்று அழைக்கப்பட்டது. அந்த மேட்ச் சோன் பகுதியில் பேட்டர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் இரண்டு மடங்கு ரன்கள் வழங்கப்பட்டன.

அதாவாது மேட்ச் சோன் பகுதியின் வாயிலாக பந்து பவுண்டரி சென்றால் அதற்கு 8 ரன்கள் வழங்கப்படும், அதேபோல் சிக்சர் அடித்தால் 12 ரன்கள் கிடைக்கும். இரண்டு ரன் எடுத்தால் 4 ரன், 1 ரன் எடுத்தால் 2 ரன் என விதிகள் மாற்றியமைக்கப்பட்டு இருந்தன. இப்படி மேட்ச் சோன் பகுதியில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர், மற்றும் 2 ரன் என மூன்று பந்துகளை சிதறவிட்ட சச்சின், 12, 8 மற்றும் 4 ரன்கள் குவித்தார்.

மொத்தம் 3 பந்துகளில் சச்சின் 24 ரன்கள் குவித்து புது வரலாற்று சாதனை படைத்தார். கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய சச்சின் தெண்டுல்கர் 49 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இருப்பினும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய டாப் 5 அணிகள்! முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் இல்ல.. இங்கிலாந்தும் இல்ல.. Top 5 most centuries team!

ABOUT THE AUTHOR

...view details