ஐதராபாத்: உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது பிசிசிஐ தான், அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலகளவில் கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக மாற முயற்சித்து அதில் தோல்வி அடைகிறீர்களா, அப்படியன்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான்.
அம்பயர் ஆவதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இணையாக பெயர், புகழ், பணம் என அனைத்தையும் சம்பாதிக்கலாம். மேலும், இந்திய அரசின் ஏ கிரேட் அதிகாரிக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டிலும் கிரிக்கெட் அம்பயருக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது அதிகம். அதேநேரம் அரசு வேலையை காட்டிலும் அம்பயராவது என்பது சற்று எளிதானது தான் என்றால் வியப்பாகத் தான் இருக்கும்.
கிரிக்கெட்டின் இதயம் இந்தியா:
மற்ற நாடுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒரு மதம், திருவிழா போன்று மக்கள் வெற்றிகளை கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு உருவாகி இருந்தாலும், அதிக கிரிக்கெட் வீரர்கள், அதிகளவில் இளைஞர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தான் காணப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பும் இளைஞர்கள் மைதானத்தில் பந்துவீசுவது அல்லது பேட்டிங் செய்வது மூலமாகத் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் அல்ல. மாறாக அம்பயர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஐசிசி அம்பயர் சம்பளம் (Umpire salary) எவ்வளவு?
அம்பயர்கள் இரண்டு வகைகளாக உள்ளனர். ஒன்று அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கீழ் வருபவர்கள். மற்றவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கீழ் நியமிக்கப்படுபவர்கள். இதில் நாடுகளின் கிரிக்கெட் வாரிய அம்பயர்களை விட ஐசிசியின் நடுவர்கள் அதிகளவில் ஊதியம் பெறுகின்றனர்.
ஐசிசியின் தரம் வாய்ந்த போட்டி நடுவர்கள் ஆண்டுக்கு 66 லட்ச ரூபாய் முதல் 1 கோடியே 67 லட்ச ரூபாய் வரை ஊதியமாக பெறுகின்றனர். இதில் போட்டிக் கட்டணம், மற்ற சலுகைகள் என அனைத்தும் அடங்கும். இது தவிர ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் அம்பயர்கள் அதிகளவில் சம்பாதிக்கின்றனர்.
டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடுவரின் ஊதியம் 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். அதேநேரம் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஐசிசி நடுவரின் ஊதியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். இதில் நடுவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் வேறுபடும். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் அலீம் தர் (Aleem Dar) தான் அதிக சம்பளம் வாங்கும் நடுவர் ஆவார்.
பிசிசிஐ நடுவர் சம்பளம் எவ்வளவு?:
பிசிசிஐ-யை பொறுத்தவரை அம்பயர்களுக்கு நிலையான ஊதியம் என்பது கிடையாது. அவர்கள் பல்வேறு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, வயது, அனுபவம், படிப்பு ஆகியவற்றின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் ஏ+, ஏ, பி மற்றும் சி ஆகிய அடுக்குகளாக அம்பயர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
இதில் ஏ+ மற்றும் ஏ பிரிவில் உள்ள நடுவர்களுக்கு நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பி மற்றும் சி பிரிவில் உள்ள அம்பயர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் அவர்களது பணித் திறமை ஆகியவை கணக்கிடப்பட்டு ஐசிசியின் எலைட் அம்பயர் பிரிவில் சேர்க்கப்படுவர். அதன் மூலம் அவர்கள் அதிக சம்பளம் பெற முடியும்.
அம்பயராக என்ன தகுதி தேவை?
அம்பயராக கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டிய அனுபவம் வேண்டியதில்லை. ஆனால், கிரிக்கெட்டை பற்றி அனைத்தையும் அறிந்து இருக்க வேண்டும். என்னென்ன விதிமுறைகள் உள்ளன, துல்லியமாக முடிவு எடுப்பது, எந்த அணியையும் சாராமல் நடப்பது, நல்ல பேச்சுத் திறன், உடல் தகுதி உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் அம்பயராவது எப்படி?