ஐதராபாத்: 2025 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நடைபெறும் ஏலத்தில் 10 அணிகளிலும் பெrரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனியை அன்கேப்ட் வீரராக அணியில் தக்கவைக்க ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐயின் அறிவிக்கும் பின் தோனியில் நிலை தெரியவரும் எனக் தகவல் கூறப்படுகிறத்.
அன்கேப்ட் பிளேயர் என்றால் என்ன?:
அன்கேப்ட் பிளேயர் என்பது ஒரு வீரர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சர்வதேச அணியில் இடம் பெறாத பட்சத்தில் அவரை அன்கேப்ட் பிளேயராக அணியில் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐயின் விதிமுறைகள் அனுமதிக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அன்கேப்ட் வீரர்கள் தக்கவைப்பு விதிமுறையை நீக்கக் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அன்கேப்ட் விதிமுறையை அம்லபடுத்த பிசிசிஐயை அறிவுறுத்தியதாக தகவல் பரவியது. இருப்பினும் இந்த விவகாரத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்தார்.
சென்னை அணியில் தோனி?