தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ind vs aus test: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி எதிரொலி.. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்தியாவுக்கு சிக்கல்! - WTC 2025 FINAL

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதன் விளைவாக, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி (Credits -AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 9:28 PM IST

ஹைதராபாத்:ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது. இதனால் இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த சோகம் ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் சந்தித்துள்ள தோல்வியின் விளைவாக, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்பதிலும் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இடியாக இறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளதன் விளைவாக, வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் புள்ளிகள் 55.89 இல் இருந்து 52.77 ஆக குறைந்துள்ளதுடன், இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அணி, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாறாக, இவ்வெற்றியின் பயனாக ஆஸ்திரேலிய அணி, 61.45 புள்ளிகளுடன் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்வதை இப்போதே உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புதிய சாதனைப் படைத்த பும்ரா!

பாகிஸ்தான் உடனான முதல் டெஸ்டில் வெற்றிப் பெற்றுள்ளதன் மூலம், தென்னாப்பிரிக்க அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமக்கான இடத்தை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி, லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் பலபரீட்சை நடத்தவுள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இதில், ஆஸ்திரேலியாவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, மீண்டும் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்து,டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அதற்கு அடுத்து சிட்னியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற வேண்டும்.

அத்துடன் விரைவில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 1-0 அல்லது 2-0 என்ற கணக்கில் இலங்கை தொடரை கைப்பற்றினால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.

மாறாக, சிட்னியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மேட்ச்களையும் ஆஸ்திரேலியா டிராவில் முடித்தாலே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அந்த அணியின் வாய்ப்பை இந்தியாவால் தட்டிப் பறிக்க இயலாது என்பதுதான் யதார்த்தம்.

ABOUT THE AUTHOR

...view details