ஐதராபாத்:இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. டி20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக அமைந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி.
அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், கவுதம் கம்பீரின் ஆல் டைம் பேவரைட் இந்திய லெவன் அணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு பிடித்த வீரர்களை வைத்து கனவு அணி அறிவிப்பது சகஜம் தான்.
ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ள கனவு அணியில் இரண்டு பெரிய வீரர்கள் இல்லாதது ரசிகர்களிடையே வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய அணியில் தன்னையும் இணைத்து உள்ள கம்பீர், தன்னுடன் தொடக்க வீரராக விரேந்தர் சேவாக்கை சேர்த்து உள்ளார்.
3வது இடத்தில் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை கம்பீர் இணைத்துள்ளார். நான்காவது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும், அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களில் 8வது இடத்தில் அணில் கும்பிளேவும், 9வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் உள்ளனர்.