தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெகா ஏலத்திற்கு முன் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்ட குஜராத்! என்ன தெரியுமா? - PARTHIV PATEL GUJARAT TITANS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Representative Image (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 5:25 PM IST

ஐதராபாத்: 18வது ஐபிஎல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை மொத்தம் உள்ள 10 அணிகளும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டன.

ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), கே.எல் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர்.

இதையடுத்து ஏலத்திற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்தீவ் பட்டேல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளர். ஒட்டுமொத்டமாக 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள பார்தீவ் பட்டேல் அதில் 13 அரை சதங்கள் உள்பட 2 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டும் இறுதிப் போட்டி வரை சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி கோப்பை வாய்ப்பை கோட்டைவிட்டது. இந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சுப்மான் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னரே தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"விராட் கோலிக்கிட்ட கேட்டா அவரே ஒப்புக்கொள்குவார்" கம்பீர் கருத்துக்கு பாண்டிங் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details