தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன்! ஹார்மோன் சிகிச்சை என்றால் என்ன?

முன்னணி இந்திய அணியின் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியதாக அறிவித்துள்ளார்.

Etv Bharat
Representative Image (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 2:11 PM IST

ஐதராபாத்:முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக அறிவித்து உள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான புகைப்படங்களை அவர் வெளியிட்டு உள்ளார். ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் ஆணாக இருந்த போது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

Sanjay Bangar and his Son (ETV Bharat)

அதன் மூலம் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டு உள்ளார். அவர் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி இருந்தார். இருப்பினும் இந்திய அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் இடையே, தான் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டதாகவும் தற்போது பெண்ணாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது முடிவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது இந்த மாற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்கு சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன்.

ஆனால், இந்த ஆட்டத்தை தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுய குணத்தை கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி" என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது. இந்நிலையில், ஆர்யனாக இருந்து அனயாவாக மாறியதால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:IND Vs SA 2nd T20: பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா..தென்னாப்பிரிக்காவுக்கு 125 ரன்கள் இலக்கு!

ABOUT THE AUTHOR

...view details