சிங்கப்பூர்:இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான தொம்மராஜு குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் வயதில் இளைய கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் என்ற பட்டம் செஸ் உலகில் கவுரவம் மிக்க சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1886 முதல் உலகில் வெறும் 17 வீரர்கள் மட்டுமே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். குகேஷ்-க்கு முன்னதாக இந்த சாதனையை படைத்த இந்தியர், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவர்.
போட்டி விவரம்:World Chess Championship 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் 7.5 புள்ளிகளை பொறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற 11வது சுற்றில் குகேஷ், 12வது டிங் லிரெனுடன் வெற்றி பெற 13வது சுற்று டிராவில் முடிந்தது.
இதன் காரணமாக 6.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையிலிருந்தன. இதனால் இந்த தொடரில் வெற்றி பெறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் 14வது சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த டி.குகேஷ் 7.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க:அர்ஜூனா விருது பெற்ற முதலாவது பெண் குதிரையேற்ற வீரர்...திவ்யாகீர்த்தி சிங் ரத்தோரின் வெற்றி பயணம்!
பிரதமர் வாழ்த்து:இதன் மூலம் இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டி.குகேஷ். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.