பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) நடைபெற்ற கலப்பு இரட்டை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, அங்கித் பகத் இணை இந்தோனேஷியாவின் ஆரிப் பங்கஸ்து, தியானந்தா சொய்ருனிசா இணையை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு வந்த இந்திய இணை, இந்தோனேஷியா ஜோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. தீரஜ் மொம்மதேவரா நேர்த்தியா அம்புகளை எய்து புள்ளிகளை பெற்றுத் தந்தார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் அங்கிதா பகத் சிறப்பாக விளையாடினார். இருவரது வேகத்திற்கு இந்தோனேஷிய ஜோடியால் ஈடுகொடுக்க முடியாமல் கடைசியில் தோல்வியை தழுவியது.