பிரான்ஸ்:33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று (ஜூலை.26) கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. இந்த தொடரில் முதல் நாளான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் 2ஆம் நாளான இன்று மொத்தம் 14 தங்கப் பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியாக துப்பாக்கி சுடுதல் நடைபெறுகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு போட்டி முதலில் நடைபெற உள்ளது.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி 12.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து இறுதி போட்டி மாலை 4 30 மணிக்கும் நடைபெறுகிறது. இதில் இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா, தமிழக வீராங்கனை இளவேனில், சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
அதைத் தொடர்ந்து 12.30 மணிக்கு ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் துடுப்பு படகு போட்டியின் தகுதி சுற்று நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் கலந்து கொள்கிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஜூலை.27) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு,
துப்பாக்கிச் சுடுதல்:
ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா, பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று மனு பாகெர், ரிதம் சங்வான், மாலை 4 மணி போட்டி நடைபெறுகிறது.