தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"என் வீட்டுக்கார் விளையாட வர மாட்டார்"- அடித்து சொன்ன வார்னர் மனைவி! - DAVID WARNER TEST COMEBACK

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என அவரது மனைவி கேண்டிஸ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
David Warner - Candice (Getty Images)

By ETV Bharat Sports Team

Published : Oct 30, 2024, 11:15 AM IST

ஐதராபாத்: இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.

பார்டர் காவஸ்கர் டிராபி:

முன்னதாக தேர்வுக் குழு அழைத்தால் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மீண்டும் விளையாடத் தயார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பேசிய வார்னர், தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சரியான காரணங்களுக்காக தான் ஓய்வு பெற்றேன் என்றும் தனது விளையாட்டு கேரியரை உரிய நேரத்தில் முடித்துள்ளேன் என்றார்.

அதே நேரத்தில் அணிக்கு நான் தேவைப்படும் பட்சத்தில் களமாட தயாராக உள்ளேன் என்றும் அதற்கு தயாராகவும், தனது பிட்னெஸ்சுக்காகவும் ஷெபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறினார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் ஓப்பனராக களமாட தயார் என்றும் வார்னர் தெரிவித்து இருந்தார்.

மீண்டும் களம் காணுவாரா வார்னர்?:

இந்நிலையில் தான் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் டேவிட் வார்னர் விளையாடுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என அவரது மனைவி கேண்டிஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான முழு உடல் திறன்களை கொண்டு இருப்பினும் தனது கணவர் மீண்டும் விளையாட மாட்டார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிஒய அவர், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அல்லது பயிற்சியாளர் அண்ட்ரூ மெக்டொனால்டு தொலைபேசி மூலம் டேவிட் வார்னரை அழைத்தால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார், ஆனால் அது ஒரு போதும் நடக்கப்போவது இல்லை என்றும் கேண்டிஸ் தெரிவித்தார்.

சொதப்பும் சுமித்.. மீட்பாரா வார்னர்:

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன் 8 ஆயிரத்து 786 ரன்கள் குவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். டேவிட் வார்னர் இருந்த வரை ஆஸ்திரேலிய அணிக்கு ஒப்பனிங் பேட்ஸ்மேனுக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்தது.

வார்னரின் ஓய்வுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப ஸ்டீபன் சுமித் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அந்த இடம் சரியாக அமையவில்லை. தொடர்ந்து ரன் குவிக்க ஸ்டீபன் சுமித் திணறி வருகிறார். ஒருவேளை மீண்டும் டேவிட் வார்னர் விளையாட தொடங்கினால், அவர் மீண்டும் தொடக்க வீரராக களம் காணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கேண்டிசின் பதில் அவர்களின் தலையில் இடியாக இறங்கி உள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு வந்த பெரும் சிக்கல்! இதை விட்ட இனி அவ்வளவு தான்!

ABOUT THE AUTHOR

...view details