சென்னை:ஆசிய அளவிலான உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்திய சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த வீரர் ராமகிருஷ்ணன், 3 - 0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, தங்க பெல்ட்டை கைப்பற்றியுள்ளார்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.ராமகிருஷ்ணன். இவர் குத்துச்சண்டை வீரராக இருந்து வருகிறார். மேலும், இவர் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் உள்ள எம்கேபி நகர் காவல் துறை போலீஸ் பாயஸ் கிளப்பில் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தேசிய அளவலான பல போட்டிகளில் பங்கேற்ற அவர், தற்போது முதன் முறையாக பங்களாதேஷில் ஆசிய அளவிலான உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்திய சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் WBC CONTINENTAL FLY WEIGHT (ப்ளை வெயிட்) என்ற பிரிவில் பங்கேற்ற சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த பி.ராமகிருஷ்ணன், அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்க பெல்ட்டை தன்வசப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:முகமது ஷமிக்கு பிசிசிஐ போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்! என்ன தெரியுமா?
கடந்த 29ஆம் தேதி பங்களாதேஷில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷைச் சேர்ந்த எம்டி.சபியுல் இஸ்லாம் என்பவரை 8 சுற்று ஆட்டத்தில் மூன்று நடுவர்களின் முன்னிலையில் 79-71, 76-70, 76-70 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், அவரை வீழ்த்தி தங்க பெல்ட்டை கைப்பற்றினார்.