டெல்லி:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரின் தொடக்க நாளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்கள் குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய பாரா குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் ஆகியோர் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரின் தொடக்க நாளில் இந்திய தேசியக் கொடியை சுமந்து அணிவகுத்துச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழாவில் கலந்து கொள்ளும் 84 பேர் கொண்ட இந்தியக் குழுவை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தேசியக் கொடியை சுமந்து செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பாராலிம்பிக்கிலும் இல்லாத அளவில் முதல் முறையாக பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக கடந்த டோக்கியோ பாரலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவில் இருந்து 54 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு இருந்தனர்.
டோஒக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பாராலிம்பிக் அணி மொத்தம் 19 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய அணி ஒரு வெள்ளி உள்பட 6 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி 71வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பாக்யஸ்ரீ ஜாதவ்?: