சிலாங்கூர் (மலேசியா): ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள், மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - சீனா அணிகள் மோதின.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக, காயம் காரணமாக அவதிப்பட்ட பி.வி.சிந்து, தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் பி.வி.சிந்து, சின் யான் ஹெப்பியை (Sin Yan Happy) 21-7, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை முன்னிலை பெறச் செய்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவில், தனிஷா க்ரோஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி இணைந்து 21-10 21-14 என்ற செட் கணக்கில், யோங் நகா டிங் மற்றும் யுங் புய் லாம் (Yeung Nga Ting and Yeung Pui Lam) வீழ்த்தினர். அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யூங் சம் யீயை (Yeung Sum Yee) வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்திய அணி பேட்மிண்டனில் மிகவும் வலிமை பெற்ற சீனாவை வீழ்த்தி, முதல் முறையாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க:தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!