தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக் 2024; 5 தமிழர்கள் உட்பட 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு! - Paris Olympics 2024

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்கள் உட்பட 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 5:16 PM IST

நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய தடகள வீரர்கள்
நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய தடகள வீரர்கள் (Credits - ANI)

டெல்லி:உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 133 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகளில் 32 பிரிவுகளில் விளையாட உள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இதில் 17 தடகள வீரர்களும், 11 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அதிலும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 வீரர்களும், ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வீரர்கள் பட்டியலில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தடகள அணி விவரம் (ஆண்கள் பிரிவு)

  • அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்)
  • நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்)
  • தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்)
  • பிரவீன் சித்திரவேல், அபுல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப் )
  • அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கிமீ பந்தய நடை)
  • முஹம்மது அனஸ், முஹம்மது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4x400 மீ தொடர் ஓட்டம்)
  • மிஜோ சாக்கோ குரியன் (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
  • சூரஜ் பன்வார் (பந்தய நடை கலப்பு மாரத்தான்)
  • சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்)

(பெண்கள் பிரிவு)

  • கிரண் பஹால் (400 மீட்டர்)
  • பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் மற்றும் 5000 மீட்டர்)
  • ஜோதி யார்ராஜி (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்)
  • அன்னு ராணி (ஈட்டி எறிதல்)
  • அபா கதுவா (குண்டு எறிதல்)
  • ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்ஆர்,பிராச்சி (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
  • பிரியங்கா கோஸ்வாமி (20 கிமீ நடை பந்தயம் / பந்தய நடை கலப்பு மாரத்தான்)

இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் 2024; தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளம் நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details