தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜோகோவிச்சை வீழ்த்தி 2வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார் அல்காரஸ்! - wimbledon tennis 2024

Wimbledon 2024: லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் 2வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார்.

அல்காரஸ்
அல்காரஸ் (Credits- AP Photos)

By PTI

Published : Jul 14, 2024, 10:25 PM IST

லண்டன்: கிராண்டஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (24), 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் ஆகிய இருவரும் மோதினர்.

இந்நிலையில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் அல்கராஸ் கைப்பற்றினார். அதேபோல், 2வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் அல்கராஸ் கைப்பற்றினார். இந்த பரபரப்பான ஆட்டத்தின் 3வது செட்டில் அல்கராஸ் 5-4 என்று முன்னிலை வகித்தார். ஆனால், திடீரென ஜோகோவிச் முன்னிலை பெற்று 5-5 என்று ஆட்டத்தை மாற்றினார். பின்னர் ஆட்டம் 6-6 என்று மாறி டை பிரேக்கருக்குச் சென்றது.

டை பிரேக்கரில் 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 6-2, 6-2, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அல்காரஸ் வெல்லும் 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். விம்பிள்டன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக வென்ற 4வது வீரர் என்ற சாதனையை அல்காரஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - அல்காரஸ் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு ரோஜர் ஃபெடரை ஜோகோவிச் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜிம்பாப்வேயை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி! முகேஷ் குமார் அபாரம்! - Ind vs Zim 5th T20

ABOUT THE AUTHOR

...view details