அகமதாபாத்:17வது ஐபிஎல் தொடரின் 59லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அபார சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றது, குஜராத் டைட்டன்ஸ். இந்த போட்டியின் இறுதியில் களமிறங்கிய தோனி, 11 பந்துகளில் ஒரு பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 26 ரன்கள் விளாசி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.
இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெ வரலாற்றில் 250 சிக்ஸர்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக, ரோகித் சர்மா 276 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 264 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்:இந்த போட்டியில் கடைசி ஓவரை ரஷின் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை சிக்ஸராக பறக்கவிட்ட தோனி, 3வது பந்தை எதிர்கொள்ளும் போது (LBW) அவரது கால்களில் பந்துபட்டது.
இதனையடுத்து குஜராத் அணி தரப்பில் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது. இதனால், சில நிமிடங்கள் வீரர்கள் கூடி நின்று பேசி கொண்டிருந்தனர். அதன்பின், டிஆர்எஸ்-ல் தோனி நாட் அவுட் என்று தீர்ப்பு வந்தபோது, திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தோனியை நோக்கியபடி ஓடிவந்தார்.
இதைப் பார்த்த தோனி, ரசிகர் வந்த திசைக்கு எதிர் திசையில் ஜாலியாக ஓடி ரசிகருக்கு ஆட்டம் காண்பித்தார். அதன் பின்னர், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் தோனியின் கால் அருகில் தலை வைத்து விழுந்து வணங்கினார். இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உள்ளே நுழைந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். இதனால், மைதானம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:'நாங்க இரண்டே பேரு'! சிஎஸ்கேவை காலி செய்த குஜராத் டைட்டன்ஸ்!