மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் எங்காவது வெளியே சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. செலவுகள் அதிகமாக இருக்கும், அதே சமயத்தில் வருமானமும் அதிகமாக இருக்கும். புதிய வாகன யோகம் உள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். கவனத்தை அங்கும் இங்கும் அலைய விடாமல், படிப்பில் செலுத்துங்கள். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்:இந்த வாரம் முழுதுமே நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாயாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவீர்கள். ஒரு புதிய உறவு மலர வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசு துறைகளிலிருந்தும் நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது.
உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் பூஜை மற்றும் பாராயணம் ஆகியவைகளை செய்வீர்கள். உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அதில் கலந்து கொள்வார்கள். உங்கள் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி - இறக்குமதி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்கள் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியரிடமிருந்து சரியான வழிகாட்டுதலைப் பெறுவார்கள். இது அவர்களின் படிப்பிற்கு பெரிதும் பயனளிக்கும்.
மிதுனம்: நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இதன் மூலம், உங்கள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். அனைத்து செலவுகளையும் ஏற்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். தங்கையின் திருமணத்திற்கு தடையாக இருந்த அனைத்து பிரச்னைகளும் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.
சீனியரிடம் பேசும் போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக பேசுவது நல்லது. சமுதாயத்திற்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதற்காக நீங்கள் ஏதாவது சமூக அமைப்பிலும் சேரலாம். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இன்பமான தருணங்களை செலவழிப்பீர்கள். காதலர்கள் தங்கள் உணர்வுகளை, காதல் துணையுடன் வெளிப்படுத்துவார்கள். இது அவர்களை மிகவும் சந்தோஷப்பட வைக்கும்.
கடகம்: திருமணமானவர்களின் வாழ்க்கையில் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் ஈகோ காரணமாக, வாழ்க்கை துணையின் மனம் புண்படும் வகையில் ஏதாவது சொல்வீர்கள். உங்களுக்கும், உங்களுடைய அன்பானவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். உங்கள் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் ஏதாவது முதலீடும் செய்யலாம்.
வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. வீட்டில் வழிபாடு நடைபெறும். தாயார் உங்களுடன் வந்து வாசிப்பார். அவர்களின் அன்பு கிடைக்கும். அதிக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். இது இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
சிம்மம்: உங்களின் மீது நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதன் காரணமாக, இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அது காதல் உறவுகளாக இருந்தாலும் சரி, இல்வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருப்பீர்கள். சில முக்கியமான பணிகளில் உங்கள் துணையின் ஆதரவு உங்களுக்கு இருப்பது, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். நிதி நிலைமையில் சற்று ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், வருமானம் அதிகரிக்கும்.
நன்கு சம்பாதிக்க முடியும். வியாபாரத்திற்கு நேரம் நன்றாக உள்ளது. உங்கள் வணிகத்தை புதிய திசையில் கொண்டு செல்ல, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் ஒரு நோக்கத்துடன் படிப்பதன் மூலம் கல்வியில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதனால், அவர்களின் கல்வியில் நாட்டமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், சில ஆரோக்கிய கோளாறுகளினால் பலவீனம் ஏற்படலாம்.
கன்னி: வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். உங்கள் குழந்தைகளின் முழு அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும். பரம்பரை சொத்துக்களிலிருந்து பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தனியாக வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாடும் நிலை ஏற்படலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு ஒரு புது உறவு அமைவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, ஏதாவது ஒரு புனித ஸ்தலத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
துலாம்:காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். உங்கள் உறவு வலுவடையும். திருமணத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க, காதல் துணையை உங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தலாம். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையுடன் சேர்த்து வேறு சில வேலைகளையும் செய்வீர்கள். இதில் உங்களின் வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் தருவார்.
நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகளில் வெற்றியும் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை மேலும் ஸ்திரமாகும். கைக்கு கிடைக்காமல் தடைபட்ட பணம், கையில் வந்து சேரும். நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தால், அதை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தருவீர்கள். அரசியலில் வெற்றி பெறுவீர்கள். ஹோமம், பூஜை, பாராயணம், பஜனை, கீர்த்தனை போன்றவை வீட்டில் நடைபெறும். குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஒன்றாக வேலை செய்வதைக் காணலாம்.
விருச்சிகம்:உங்கள் உணர்வுகளை காதல் துணையிடம் வெளிப்படுத்தி, அவர்களுக்கு பரிசும் கொடுப்பீர்கள். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் இல்வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீட்டினால் பதற்றம் ஏற்படலாம். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மூதாதையர் சொத்துக்களிலிருந்து பண வரவுகள் வர வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். செலவுகள் நிறைய அதிகரிக்கும், அதேசமயம் வருமானமும் அதிகரிக்கும்.
அரசு துறைகளில் இருந்து ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக வெற்றியை அடைவார்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும். சகோதரரின் திருமணத்துக்கு வந்த தடைகள் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தனுசு:குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் சுக துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதை வீட்டில் உள்ள பெரியோரிடமிருந்து கற்றுக் கொள்வீர்கள். இல்வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக்கூடும். சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது இனிமையான் ஒன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பணவரவுக்கான அறிகுறிகள் காணப்படுகிறது. சொத்து வாங்குவதற்கான யோகம் உள்ளது. நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. இதனால் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். உயர்கல்விக்கு நேரம் சாதகமாக உள்ளது. ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கக் கூடும்.
மகரம்: திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணை ஒரு புதிய வேலையில் ஈடுபடுவார். சகோதரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைத்ததால், பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதில் லாபத்தை ஈட்டுவதன் மூலம் உங்கள் நிதி நிலையை வலுவடையும். வீட்டை மராமத்து செய்வதற்காக நிறைய பணம் செலவழிப்பீர்கள்.
தூரத்து உறவினர் வீட்டில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொண்டு, அனைவருடனும் மகிழ்சியாக இருப்பீர்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்புகள் அமையும். காதல் உறவுகளில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள், அதில் வெற்றியும் பெறுவீர்கள். பணியிடத்தில், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். சீனியர், ஜூனியர் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது நல்லது. இதன்மூலம் உங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவடையும்.
கும்பம்: காதல் உறவுகள் நன்கு வலுப்படும். உங்கள் காதல் துணையை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள். இதனால் உங்கள் திருமணம் தாமதமாகாது. திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதால், மிகவும் நன்றாக உணர்வார்கள். குடும்ப நலனுக்காக வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் முன்பு செய்திருந்த முதலீட்டின் முழு பலனையும் பெறுவீர்கள்.
உங்கள் வருமானத்தை வலுப்படுத்த, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவுவார்கள். கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். உயர்கல்விக்கு இந்த வாரம் சாதகமாக இல்லை. படிப்பில் ஆர்வம் குறையும். பெரியோரின் வழிகாட்டுதல் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
மீனம்: திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டமிடுவீர்கள். காதல் திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி நல்ல உறவு அமையும். நிதி நிலைமையைப் பொறுத்த வரையில், இந்த வாரம் செலவுகள் நிறைந்ததாக இருக்கும். தினசரி வருமானம் நன்றாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் எந்த பிரச்னையும் சந்திக்க மாட்டீர்கள்.
வியாபாரம் செய்பவர் எனில், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. வீடு, கடை, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைத்தால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த வாரம், வீட்டில் உள்ள பிரச்னைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். இதன் காரணமாக, உங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது.