தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி..! உங்கள் ராசிக்கு எப்படி..?

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

Today Tamil Horoscope for 12 Zodiac Signs
இன்றைய ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 6:13 AM IST

மேஷம்: உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள் விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சச்சரவுகளைத் தவிர்க்கவில்லை என்றால் உங்களது புகழும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம்.

மிதுனம்: இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாகக் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்: உங்களது பணியில், முக்கிய நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். அதோடு கூடவே உங்களது கடமைகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலை வாய்ப்பையும் நீங்கள் நிராகரிக்கக் கூடும்.

சிம்மம்: புத்துணர்வு மற்றும் புத்துயிர், இந்த இரண்டு வார்த்தைகள் இன்றைய தத்துவமாக இருக்கும். உங்களைப் புதுப்பிக்கச் செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும்.

கன்னி: இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்: இன்று உங்கள் பணியில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். மக்களைத் தொடர்பு கொள்வது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. மாலைப்பொழுதில் உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்.

விருச்சிகம்: உறவுகளை நீங்கள் அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகுமுறையின் காரணமாக, கடினமான பிரச்சினைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.

மகரம்: கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனதிற்குப் பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதைக் கழிக்க விரும்புவீர்கள்.

கும்பம்: இன்று, கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாகச் சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலை நேரத்தில் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.

மீனம்: நீங்கள் மோசமான குணமும் பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இதுபோன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் இதனைத் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க: Weekly Horoscope: வாழ்க்கையில் காதல் மீண்டும் மலரும்..! கவலையை மறக்கும் வாரம் இது

ABOUT THE AUTHOR

...view details