மேஷம்:இன்று நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். அது நிதி ஆதாயம் குறித்த செய்தியாக இருக்கலாம் அல்லது நண்பர்களை சந்திக்கும் செய்தியாகவும் இருக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் 100 சதவீத பங்களிப்பைக் கொடுப்பீர்கள். அதற்கு சிறந்த வகையில் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற வகையில், விரிவாக செயல் திட்டத்தை தயாரித்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில், செயல்புரிய உதவியாக இருக்கும். உங்களது அகராதியில், தோல்வி என்பதே இல்லை. நீங்கள் ஒரு நிபுணரைப் போல பணிபுரிவீர்கள்.
மிதுனம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, திறக்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாகத் தீர்க்கப்படும்.
கடகம்:இன்றைய தினத்தில், நீங்கள் செலவுகளை நன்றாக கட்டுப்படுத்துவீர்கள். எனினும், கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் செய்ய விரும்பமாட்டீர்கள். அது நெருங்கியவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும் போது உதவியாக இருக்கும். உங்களது வேலை தன்மையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிம்மம்:வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. கடின உழைப்பு தேவைப்படாத விஷயங்களில் கூட, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். உங்கள் முயற்சியின் மூலம் நீங்கள் திறமையாக செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.
கன்னி:உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்கள் அறிவாற்றலும், அனைவரையும் அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.