தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: மனதிற்கு பிடித்தவர்களுடன் மாலைப்பொழுதைக் கழிக்க வாய்ப்பு - எந்த ராசிக்காரருக்குத் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: மே 21ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Photo Credits: ETV Bharat Tamil Nadu (File Photo))

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 6:55 AM IST

மேஷம்:உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக, அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ரிஷபம்:உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள், விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். சச்சரவுகளை தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் உங்களது புகழும், சுயமரியாதையும் பாதிக்கப்படலாம். கவனமாக செயல்படவும்.

மிதுனம்:அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக, வெளியில் சென்று உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்:பணியில் முக்கிய நாள். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். அதோடு கூடவே உங்களது கடமைகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், ஒரு நல்ல வேலைவாய்ப்பையும் நிராகரிக்கக் கூடும்.

சிம்மம்:புத்துணர்வு மற்றும் புத்துயிர் இந்த இரண்டு வார்த்தைகள் இன்றைய தத்துவமாக இருக்கும். உங்களை புதுப்பிக்க செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும்.

கன்னி:வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்:பணியிடத்தில் தொடர்பு மற்றும் வெளிப்பாடு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் சிறந்த வகையில் கையாளும் திறன் உங்களுக்கு உண்டு. வர்த்தக ஆலோசனை என்றாலும், கூட்டங்கள் என்றாலும் சிறந்து விளங்குவீர்கள். மக்களைத் தொடர்பு கொள்வது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. எனினும் மாலையில் மனதிற்கு பிடித்தவருடன் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்.

விருச்சிகம்:உறவுகளை அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும். இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.

தனுசு: இன்று மகிழ்ச்சியான நாள். தொழில் ரீதியான உங்களது அணுகு முறையின் காரணமாக, கடினமான பிரச்சனைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.

மகரம்:கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனதிற்குப் பிடித்தவர்களுடன், இனிமையாக மாலைப்பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.

கும்பம்: கவலையும், மகிழ்ச்சியும் கலந்த நாள். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பை உணர்கின்றோம்.

மீனம்:மோசமான குணமும், பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இதுபோன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும், ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் இதனைத் தவிர்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details