மேஷம்:உண்மையின் மதிப்பு என்ன என்பதை நிரூபித்து காட்டக்கூடிய சிறந்த நாளாக இன்று உள்ளது. பணியிடத்தை பொறுத்தவரை சிறந்த திட்டங்கள் மற்றும் புதிய யோசனைகள் என துடிப்புடன் காணப்படுவீர்கள். சில சமயங்களில் சாதகமான சூழ்நிலைகள் இருக்காது. இருப்பினும், நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். வாழ்க்கையில் நுழைந்த எதிர்மறையான விஷயங்களை விரட்ட கற்றுக்கொண்டால், ஏமாற்றம் என்பது உங்கள் நிரந்தர விருந்தாளியாக இருக்காது.
ரிஷபம்:எல்லாம் விதிதான் காரணம் என்று நொந்து கொள்ளக்கூடிய நாளாக இன்று இருக்கலாம். அடுத்து வரும் நாட்களும் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், அப்படி நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், தவறாக முடிவு செய்து விட்டோமோ? என்று நினைக்கத் தோன்றலாம்.
மிதுனம்:எந்த வேலையை தொடங்கினாலும், அது எந்தவித தாமதமும் இன்றி வெற்றிகரமாக முடியும். இருப்பினும், எந்த விதமான வேலையை முடிக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும். உங்கள் வேலைக்கு உரிய வெகுமதி அல்லது பலன் விரைவில் கிடைக்கும் என்பதால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்:இன்று புதிய பொறுப்புகள் வரும். அதில் மூழ்குவதால் சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். இதில், தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
சிம்மம்:உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஈகோ தடையாக இருக்க இடம் கொடுக்காதீர்கள். காதல் வயப்படுவதற்கு சிறப்பான நாள். இருப்பினும், அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள்.
கன்னி:இன்றைய நாள் முழுவதும் இனம் புரியாத பயம் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதிக நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் சூழ்நிலைகளிலிருந்து தெளிவு பிறக்கும். சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
துலாம்:ரியல் எஸ்டேட் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் புதிய உயரத்தை எட்டுவார்கள். இது உங்கள் மனதுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். பணியிடத்தை பொறுத்தவரை உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு வரும். பணப்பலன்கள் மரபுக்கு மீறியதாக இருக்கும்.
விருச்சிகம்:எரிச்சலும், கோபமும் அதிகம் ஏற்படக்கூடும். அது வரக்கூடிய அதிர்ஷ்டத்தை பாதிக்கும். சச்சரவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், மாலையில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, அமைதியாகவும், நிம்மதியாகவும் உணரும் வாய்ப்புள்ளது.
தனுசு:முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். உங்களை ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகன் ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து தயாராக இருங்கள். உங்கள் நட்சத்திரப்படி, வியாபார நிமித்தம் காரணமாக வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.
மகரம்:நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக, நிறைய தியாகம் செய்துள்ளீர்கள். வேலையை விட்டு விட்டு நேரம் ஒதுக்கியது முதல், அவர்களை சந்திக்க பெரும் முயற்சி எடுத்துள்ளீர்கள். கடுமையான பணிகளையும் செய்து முடித்துள்ளீர்கள். அதற்கான அனைத்து பலன்களையும் அனுபவிக்கும் காலம் இது.
கும்பம்:சிக்கலான விஷயங்களையும், மிக எளிதாக கையாள்வீர்கள். எனினும், அனைத்து பணிகளையும் மற்றவர்கள் உங்களிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு, மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படலாம். எனினும், பலவீனங்களை வலிமையாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.
மீனம்:இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைவாகவோ, குழப்பமாகவோ காணப்படலாம். இது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி, எளிதான தீர்வுகளைக் காண்பதற்கு கூட கடினமாக்கும். எனவே, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவும். சர்ச்சைக்குரிய அல்லது பெரிய திட்டங்களைத் தவிர்க்கவும்.