தமிழ்நாடு

tamil nadu

இன்றைய ராசிபலன்: கனவு இல்லம் கைகூடும் வாய்ப்புள்ளது.. எந்த ராசிக்குத் தெரியுமா? - Today Rasipalan in Tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 6:57 AM IST

Today Rasipalan in Tamil: ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்:இன்று உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் அனைத்து திட்டங்களையும் சிறந்த வகையில் அமைப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

ரிஷபம்:ஒரு மேலாளராக நிறுவனத்திற்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளை சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்:இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வாழ்க்கையின் அரிய தருணங்களை நினைத்துப் பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பீர்கள். எனினும் தனிப்பட்ட விஷயம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் ஒரு பொருளை விற்கவும், வாங்கவும் இன்று பொருத்தமான நாள்.

கடகம்:அலுவலகத்தில் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதேநேரத்தில், பலவிதமான எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன், நேரத்தை செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்:உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். அதனால், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், பயணத் திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள்.

கன்னி:குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்:அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை நீங்கள் உங்கள் செயல்திறனுடன் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் உங்கள் திறமை பாராட்டத்தக்கதாக இருக்கும்.

விருச்சிகம்:இன்று பல நிகழ்வுகள் ஏற்படும் நாள். அனுபவம் மூலம் பாடங்களை கற்க மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்கவும். அவர்கள் ஒத்துழைப்பை வழங்குவார்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களில் விலகி இருக்கவும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு:உங்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். இன்று காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.

மகரம்:பல்வேறு வழிகளிலிருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்தையும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்கக் கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்:இன்று மிகவும் பதட்டமான மனநிலை இருக்கும். எவரேனும் ஒருவருடன், ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் கூட, உங்களுக்கு மன ஆறுதல் தர முடியாத நிலை இருக்கும். தியானப் பயிற்சியில் ஈடுபட்டால், மன அமைதி ஏற்பட்டு தினசரி பணிகளைத் தொடர இயலும்.

ABOUT THE AUTHOR

...view details