மேஷம்:இன்றைய தினம் நீங்கள் முழுமையான சுதந்திரத்தை அடைய நினைப்பீர்கள். டிவி, ஷாப்பிங் அல்லது திரைப்படம் போன்ற இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. உறவினர்கள், நண்பர்களுக்கு இன்று நீங்கள் விருந்து தரலாம். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவீர்கள்.
ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் மிகவும் சுயநலத்துடன் நடந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற உணர்வை கொடுக்கக் கூடும். மற்றவர்களை நீங்கள் கட்டுப்படுத்த நினைத்தால் ஏமாற்றமடைவீர்கள். இதனால், முக்கிய உறவுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் சந்திக்கும் அனைவரின் தேவைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மிதுனம்:உங்கள் சமூக வட்டத்தில் ஒரு தலைவராக நீங்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். ஏதோவொரு விஷயத்திற்காக உங்கள் மனம் ஏங்குகிறது. அதை அடைவதற்கு உங்கள் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய கற்பனைத்திறன் மூலம் இன்று சில பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கக் கூடும். உங்கள் மனதை குடைந்து வரும் சில கேள்விகளுக்கு, இன்று பதில் கிடைக்கலாம்.
கடகம்:கடவுளின் ஆசியுடன் இன்று நீங்கள் நினைக்கும் அனைத்து காரியமும் வெற்றி பெறும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்புரியும் நாள். தங்களை யாரென்று அனைவரிடமும் நிரூபிப்பீர் நீங்கள் உங்கள் கற்பனைத் திறனை சிறப்பாக வெளிக்காட்டுவீர்கள். பலவகையில் நீங்கள் மகிழ்ச்சியடையும் நாள் இன்று.
சிம்மம்: இன்றைய தினத்தில், நீங்கள் உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளைக் காண்பதில் நீங்கள் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை புரிபவர்களும் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது அச்ச உணர்வுகள் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை பாதிக்க, நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். பணியில் உங்கள் மூத்தவர்கள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள்.
கன்னி:உங்கள் வர்த்தக திறமைகளை சோதிக்கும் வகையிலான அனைத்து சவால்களையும் நம்பிக்கையுடன் சந்திப்பீர்கள். குறிப்பாக முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க, உங்களுக்கு புதுமையான வழிகள் தோன்றும். இது தீர்வினைக் கொடுக்கும்.