2025-ஆம் ஆண்டின் தொடக்கம் தனுசு ராசிகாரர்கள் சில பல சவால்களை சந்தித்தே ஆவார்கள். இவை சற்று மிதமாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில், கட்டாயமாக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிததே ஆக வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மிக சிறப்பாக பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இது மிகவும் முக்கியம். உங்களுக்கான இந்த ஆண்டின் தன்மையைப் பார்க்கும் போது குறிப்பாக பயணம் செய்யும் போது அல்லது வாகனம் ஓட்டும் போது, விபத்துக்கள் அல்லது காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நீங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை அணுகுமுறைகளையும் பின்பற்றுங்கள் கவனம் அவசியம் தேவைப்படுகிறது.
உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது நல்லது, ஏனெனில் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி எச்சரிக்கையாக நிவர்த்தி செய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உத்தியோகத்தில் இருக்கும் நபர்களுக்கு, இந்த ஆண்டு பணியிடத்தில் அதிக முயற்சிகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் , வேலையில் ஆர்வமின்மையாக செயல்பட்டால் தொழில்முறை மட்டத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ஆண்டின் ஆரம்ப கட்டத்தில், எதிரிகள் அதிக பலத்தை வெளிப்படுத்தலாம், எது எப்படி இருந்தாலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் அரசாணைகளினால் வியாபாரத்திற்கு நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும் மேலும் சர்வதேச அளவில் வியாபாரத்தை வளர்க்க எடுத்த முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியம் உள்ளது. ஆண்டின் இரண்டாவது கால கட்டம் வியாபர நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.