தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

“ஓம் காளி..” கொடியேற்றத்துடன் துவங்கிய குலசை தசரா திருவிழா! - Kulasai Dussehra Festival 2024

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குலசை தசரா திருவிழா கொடியேற்றம்
குலசை தசரா திருவிழா கொடியேற்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 2:13 PM IST

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா (Dussehra festival) மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா, இன்று (அக்.3) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9.25 மணிக்கு உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை அடுத்து மாலை அணிவித்து விரதமிருந்த பக்தர்கள், திருக்காப்பு கட்டி வேடமணியத் தொடங்கினர்.

இதையும் படிங்க: வருடாந்திர பராமரிப்புப் பணி: பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் ரோப் கார் சேவை!

இந்த கொடியேற்றத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அப்போது, 'ஓம் காளி ஜெய் காளி' என்ற கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க சுமார் 700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குறிப்பாக, விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்காரம் வரும் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்கரையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details