தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

ஆக்டிங் டூ அரசியல்.. விஜய் கடந்து வந்த பாதை..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்துள்ள நிலையில் தற்போது அந்த மாநாட்டில் விஜய் இருக்கும் புகைப்படங்களும் மற்றும் சினிமா முதல் அரசியல் வரையிலான அவரது பயணத்தில் உள்ள ஒருசில சுவாரசியமான விசயங்களும் இதோ உங்களுக்காக... (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 11:01 PM IST

தமிழ் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படும் விஜய் ஜூன் 22, 1974 அன்று பிறந்தார். (Credit - ETV Bharat Tamil Nadu)
சினிமா மீது ஆர்வம் கொண்ட விஜய், ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். (Credit - ETV Bharat Tamil Nadu)
விஜய் தனது 10வது வயதில் 'வெற்றி' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக்க அறிமுகமாகி, தனது தந்தை இயக்கிய 'இது எங்கள் நீதி' என்ற திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். (Credit - ETV Bharat Tamil Nadu)
விக்ரமன் இயக்கி 1996ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவே உனக்காக' திரைப்படம் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. (Credit - ETV Bharat Tamil Nadu)
விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான 'கில்லி' படம் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. (Credit - ETV Bharat Tamil Nadu)
2013ஆம் ஆண்டு சென்னை அமெரிக்கத் தூதரகம் நடத்திய உலக சுற்றுச்சூழல் விழாவில் விளம்பரத் தூதராக விஜய் நியமிக்கப்பட்டார். (Credit - ETV Bharat Tamil Nadu)
இதுவரையில் 68 படங்களை நடித்துள்ள விஜய் தனது 69வது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். (Credit - ETV Bharat Tamil Nadu)
2009ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை 'மக்கள் இயக்கம்' என்ற பெயரில் சமூகநல அமைப்பாக மாற்றினார். (Credit - ETV Bharat Tamil Nadu)
தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டு அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அக்.27ல் முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்துள்ள்ளார். (Credit - ETV Bharat Tamil Nadu)
அடுத்ததாக தேர்தலில் போட்டியிடுவதற்கான விஜயின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அவரது தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். (Credit - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details