தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

இந்தியா - மியான்மர் இடையேயான சுதந்திர இயக்க ஒப்பந்தம் - நன்மைகளும்.. சவால்களும்! - India Myanmar FMR Suspends

India-Myanmar FMR: மியான்மரில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக அண்டை மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக தஞ்சமடைந்த அந்நாட்டு மக்களை முதற்கட்டமாக அண்மையில் மத்திய அரசு நாடு கடத்தியது. இந்த நடவடிக்கையால் இந்தியா - மியான்மர் இடையிலான சுதந்திர இயக்க வழிமுறை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 6:59 PM IST

Updated : Mar 15, 2024, 7:29 PM IST

டெல்லி : மியான்மருடன் ஏறத்தாழ ஆயிரத்து 643 கிலோ மீட்டர் தூர நிலப்பரப்பை பகிர்ந்து கொள்கிறது இந்தியா. இந்த ஆயிரத்து 643 கிலோ மீட்டர் தூரம் என்பது அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளாகும். இதனால் இந்த மாநிலங்களில் இரு நாடுகளை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சுவாரஸ்யத்தக்க வகையில் கூற வேண்டுமானால் நாகாலாந்தில் ஒரு வீடு இந்தியா - மியான்மர் நாடுகளின் எல்லையில் அமைந்து உள்ளது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் மியான்மரில் சாப்பிட்டால், இந்தியாவில் தூங்குகின்றனர். அப்படி இரு நாடுகளின் எல்லையில் அந்த வீடு அமைந்து உள்ளது.

அதேபோல் அங்கு உள்ள தேவாலயமும் இரு நாடுகளின் எல்லைக்கு இடையில் அமைந்து உள்ளது. தேவாலயத்தின் குரு மியான்மரில் இருந்து பிரசங்கம் வைத்தால், பக்தர்கள் நாகாலந்தில் இருந்து அதை கேட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இப்படி பல நூறு விஷயங்களை இந்தியா - மியான்மர் இடையே இந்த வடகிழக்கு மாநிலங்கள் இணைக்கின்றன.

இதன் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு எல்லையோர மாநிலங்களில் உள்ள மக்கள் எளிதாக இரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் சென்று வணிகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், சுதந்திர இயக்க வழிமுறை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில், மியான்மரில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் ராணுவம் - புரட்சி படைகளுக்கு இடையேயான மோதல் பேசு பொருளாக மாறி உள்ளதால், அந்த ஒப்பந்தத்தை மீற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

சுதந்திர இயக்க வழிமுறை ஒப்பந்தம் தோன்றியது எப்படி? : 19வது நூற்றாண்யில் இந்தியா மற்றும் மியான்மர் பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டுவதில் எந்த கட்டுபாடுகளும் இல்லை. அதன் பின் 1947ல் இந்தியாவும், 1948ல் மியான்மரும் சுதந்திரம் பெற்ற நிலையில், 1967ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசின் கிழக்கு கொள்கை சட்டத்தின் படி இந்தியா - மியான்மர் இடையே 16 கிலோ மீட்டர் வரை விசா இல்லாமல் பயணிப்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த குறிப்பிட்ட 16 கிலோ மீட்டரை தாண்டி மக்கள் பயணிக்க வேண்டுமெனில் தகுதியான பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

அண்டை நாட்டில் உள்ள தங்களது உறவினர்களை பார்ப்பது மற்றும் வணிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள இரு நாட்டு மக்களும் குறிப்பிட்ட தூரத்திற்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி அனுமதிக்கப்பட்டனர். மேலும், எல்லையில் வசிக்கும் மக்கள் அண்டை நாட்டில் தங்குவதற்கு ஓராண்டு எல்லைப் பாஸ் தேவைப்பட்டது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை எளிதில் அணுகுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும் இந்த செயல்முறைக்கு அனுமதிக்கப்பட்டன. இந்தியக் குடிமக்கள் மியான்மருக்குள் 16 கிலோ மீட்டர் தூரத்தில் 72 மணி நேரம் வரை எந்த ஆவணமும் இல்லாமல் தங்கலாம். அதேபோல், மியான்மர் குடிமக்களுக்கு, இந்தியாவில் 16 கிலோ மீட்டர் வரை எந்த ஆவணங்களும் இன்றி ஏறத்தாழ 14 நாட்கள் தங்க வரம்பு நிரணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மிசோரம் மற்றும் நாகாலாந்தில் உள்ள மக்கள் இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடைந்தனர். மியான்மரின் சின் மக்கள் மற்றும் இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் குக்கி மக்கள் மிசோவின் உறவினர் பழங்குடியினர் மற்றும் மியான்மரில் உள்ள மிசோ மக்கள் பலர் சின் மக்களின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பரந்த சோ சமூகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். மேலும், நாகாலாந்தில் கியாம்னியுங்கன் மற்றும் கொன்யாக் பழங்குடியின மக்கள் எல்லையின் இருபுறமும் வாழ்கின்றனர். இந்நிலையில், மியான்மரில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக கடந்த மாதம் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த முடிவு செய்தது.

மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் முடிவை மத்திய அறிவித்த போது, அதற்கு மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய இரு மாநிலங்களின் மக்கள் மற்றும் மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அதேநேரம் மணிப்பூரின் மெய்டேய் மக்களும், மாநில அரசும், அருணாச்சல பிரதேச அரசும் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்து உள்ளது.

எதற்காக ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது? : மியான்மரில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அதனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏற்பட்டு உள்ள உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சியை கண்டித்து கிளம்பிய புரட்சிப் படைகள், ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.

இதனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிகளை தேடி மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக புகழிடம் தேடி வந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக சின் மற்றும் குக்கி பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழல் நிலவுவதாக கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளது.

மணிப்பூர் ஏறத்தாழ 398 கிலோ மீட்டர் தூரத்தை மியான்மருடன் பகிர்ந்து கொள்கிறது. அங்கு சட்டவிரோத போதைப் பொருள் கடத்த உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு பின் மணிப்பூரில் மட்டும் ஏறத்தாழ 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் 625 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா - மியான்மர் இடையிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதன் காரணமாக அடுத்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 7 பேர் இம்பாலில் இருந்து கடந்த வாரம் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளதாலும், அனைவரையும் ஒரே நேரத்தில் நாடு கடத்த முடியாது என்பதாலும் சில சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் படி அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்ய மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்? :மணிப்பூரை போல் இல்லாமல், மிசோரம் மாநிலம் மியான்மர் மக்களின் பிராதன புகலிடமாக உள்ளது. மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பின் குக்கி, சோமிஸ் பழங்குடியின மக்களின் பிரதான புகலிடமாக மிசோரம் காணப்படுகிறது.

கூடுதலாக மியான்மரில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் அங்கிருந்து வெளியேறிய சின் இன மக்களும் மிசோரத்தில் பெருவாரியாக வசிக்கின்றனர். மிசோ பழங்குடியின மக்களுக்கும் சின் மக்களுக்கும் இடையே இணக்கமான உறவு காணப்படுகிறது. சின் மக்களை தங்களது உறவினர்களாக மிசோ பழங்குடியின மக்கள் காணுகின்றனர்.

அதேபோல் நாகாலாந்தை பொறுத்தவரை மியான்மரில் நிலவும் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலால் நேரடியாக பாதிக்கப்படதாக மாநிலமாக காணப்படுகிறது. நாகாலாந்தில் உள்ள பழங்குடியின மக்கள் இந்தியா - மியான்மர் இடையிலான எல்லை தாண்டும் ஒப்பந்தத்தால் பெரிதும் பலன் அடைவதால், மத்திய அரசின் தற்போதைய முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியா - மியான்மர் இடையே வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபடும் பட்சத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இன சமூகங்கள், அதன் குடும்பங்கள் எல்லைகளுக்கு அப்பால் பிரிக்கப்படும் என ஷில்லாங்கை தளமாகக் கொண்ட ஆசிய சங்கம சிந்தனைக் குழுவின் உறுப்பினர் கே.யோம் என்பவர் ஈடி பாரத்திடம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், இந்த மக்கள், அவர்கள் பகிர்ந்து கொள்ளும் சமூக உறவுகளைத் தவிர, தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக எல்லையை கடப்பதை சார்ந்து இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு, இது அடிப்படை உயிர்வாழ்வதற்கான வழிமுறைகளை சிதைப்பதாக உள்ளது. ஒரு புற எல்லையில் விவசாயத்திற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் வாழ்த்தகுந்த இடமாக மாற்றப்பட்டு உள்ள நிலையில், அதன் குறுக்கே வேலி அமைத்தால் மக்கள் எப்படி வாழ்வார்கள் என கே.யோம் ஈடி பாரத்திடம் தெரிவித்தார்.

என்ன தான் வழி? :வடகிழக்கு மாநிலங்களின் வாழ்வாதர பிரச்சினையாக உருமாறி உள்ள இந்த சிக்கலை மத்திய அரசு மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று கே.யோம் கூறி உள்ளார். மேலும், மத்திய அரசு பிரச்சினையின் அடிப்படை யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதேநேரம், சட்டவிரோத குடியேற்றம், நாடு தாண்டிய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவற்றால் இந்திய அரசு எதிர்கொள்ளும் பிரச்சனையை மிசோரம் மற்றும் நாகாலாந்து அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா - மியான்மர் இடையிலான சுதந்திர இயக்க வழிமுறை ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நிலப்பரப்பின் தன்மையைக் கருத்தில் கொண்டு, எல்லை வேலி அமைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும், இதில் உள்ள செலவு மிகப் பெரியதாக இருக்கும் என்றும் கே.யோம் தெரிவித்து உள்ளார். மேலும், ஹாட் ஸ்பாட் பகுதிகளில் முள்கம்பிகளை அமைக்கவும், கேமராக்களை நிறுவவும் அரசு திட்டமிட்டு உள்ளதால் அதற்கு ஆகும் செலவை கருத்தில் கொண்டால், அது எந்தளவுக்கு நீடித்திருக்கும் என்பதுதான் கேள்வி என அவர் கூறி உள்ளார்.

இதையும் படிங்க :1 கோடி வீடுகளுக்கு சோலார் மேற்கூரை சாத்தியமா? இலக்கு மற்றும் சவால்கள் என்னென்ன?

Last Updated : Mar 15, 2024, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details