ஐதராபாத் :தொடர்ந்து மாசு அடைந்த காற்றை சுவாசித்து வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் காற்றின் தரநிலை குறியீடு என்பது பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இது பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், காற்று மாசுபாட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய் வகையில் இல்லை என்றும் மக்கள் பீதிக்குள்ளாக வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அண்மையில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வு அறிக்கையில், அதிகளவிலான காற்று மாசுவை காட்டிலும், குறைந்த அல்லது அடர்த்தியான அளவு கொண்ட காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ரத்த நாள சேதங்கள் மிக மோசமானது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தொடர்ந்து மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான காற்று மாசுபாடு மற்றும் அடர்த்தி அதிகமான காற்று மாசு ரத்த நாளங்களை சேதப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மூத்த இருதய நோய் நிபுணரும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
பிரிட்டன் ஜர்னல் ஆய்வறிக்கை கூறுவது என்ன?: பிரிட்டன் மெடிக்கல் ஜர்னலில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி தொடர் காற்று மாசு இருதயம் சார்ந்த சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு மட்டும் கடுமையான காற்று மாசுவை உட்கொண்டோமா அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தொடர்ச்சியாக காற்று மாசு உட்கொள்ளப்பட்டதா என்பது முக்கியமல்ல.
காற்றின் தரத்திற்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை கடைபிடித்தால் மட்டுமே காற்று மாசுவால் ஏற்படும் விளைவுகளை தவிர்த்து பலன்களை அடைய முடியும்.
நீண்ட கால மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய இருதயம் சார்ந்த நோய் தாக்குதல் மற்றும் பிரச்சினைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்றில் குறிப்பிட்ட நுண்துகள்கள் (particulate matter) 2 புள்ளி 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த குறிப்பிட்ட நுண்துகள்கள் உரிய அளவை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில் இருதய நோய்கள் சார்ந்த அபாயங்களை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நுண்துகள்கள் 2 புள்ளி 5 மைக்ரோ மீட்டர் அளவை தாண்டி உயரும் பட்சத்தில் சீரற்ற இருதய இயங்குதன்மை, இதய செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் Cardiac arrhythmia என்பது சீரற்ற இருதய இயங்குதன்மை குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகளவிலான இதய துடிப்பு ஆகும். உலக சுகாதார அமைப்பின் தரநிலையின் படி காற்றின் தரம் என்பது ≤5 µg/m3 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
காற்று மாசுவை கட்டுப்படுத்த எளிதான வழி:மூத்த இருதய நோய் நிபுணரும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், காற்றின் தரநிலை குறியீடு 100 முதல் 150 என்ற அளவில் இருந்தால் எந்தவித ஆபத்தும் இல்லை. கடந்த சில நாட்களாக காற்றின் தரக் குறியீடு அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
உண்மையில் காற்று தரக் குறியீடு 400 பிளஸ் என்ற அளவை தாண்டும் பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அதேநேரம் 100 முதல் 150 வரை இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பானது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. காற்று மாசுபாட்டின் குறைந்த அளவிலான உமிழ்வு என்பது கூட ஒருவித அழற்சியை தூண்டும் வகையில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.